Sep 7, 2026
Thisaigal NewsYouTube
சீனாவுக்கு ஸ்டீவன் சிம் தலைமையில் சிறப்பு வர்த்தகப் பயணம்
தற்போதைய செய்திகள்

சீனாவுக்கு ஸ்டீவன் சிம் தலைமையில் சிறப்பு வர்த்தகப் பயணம்

Share:

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் இன்று முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை சீனாவின் குவாங்சோ நகருக்கு மலேசியக் குழுவிற்கு தலைமையேற்று பயணமாகினார்.

APEC சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதுடன், சீனாவின் அனைத்துலக சிறு மற்றும் நடுத்தர நிறுவனக் கண்காட்சியான CISMEF-லும் மலேசியக் குழு பங்கேற்கிறது.

இந்தப் பயணத்தில் உணவு, பானம் மற்றும் சுகாதாரப் பொருட்கள் துறைகளைச் சேர்ந்த 12 மலேசிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் கூட்டுறவு நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

CISMEF மூலம் 150 மில்லியன் ரிங்கிட் வரையிலான சாத்தியமான விற்பனை மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை உருவாக்குவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மலேசிய நிறுவனங்களுக்கு புதிய சந்தைகள், வாங்குபவர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் மின்னணு வர்த்தகக் கூட்டாளர்களை கண்டறிவதுடன், சீனாவிலிருந்து மலேசியாவுக்கு முதலீடுகளை ஈர்ப்பதிலும் அமைச்சர் ஸ்டீவன் சிம் தலைமையிலான குழுவினர் கவனம் செலுத்துவர்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து