May 13, 2026
Thisaigal NewsYouTube
முதியவரை வெட்டிக்கொன்று விட்டு கொள்ளையடித்ததாக நான்கு இந்திய இளைஞர்கள் மீது கொலை குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

முதியவரை வெட்டிக்கொன்று விட்டு கொள்ளையடித்ததாக நான்கு இந்திய இளைஞர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

Share:

கடந்த மாதம் தெலுக் இந்தானில் ஓர் இந்திய முதியவரை வெட்டிக்கொன்று விட்டு அவரின் வீட்டின் நகைகளை கொள்ளையடித்ததாக நான்கு இந்திய இளைஞர்கள் தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

பிரகாஷ் ராவ், எம். ஏ. அழகேஸ்வரன், தி. தியாகேசன் மற்றும் கே. சங்கர் என்ற 25 வயதுடைய அந்த நான்கு நண்பர்களும் மாஜிஸ்திரேட் நைதாதுல் அதிரா அஸ்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிரான கொலை குற்றச்சாட்டு, மொழிப்பெயர்ப்பாளர் உதவியுடன் தமிழில் வாசிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி காலை 6.30 மணியளவில் ஹிலிர் பேராக் மாவட்டம், தெலுக் இந்தான், பெக்கான் பாரு, லோரோங் எமாஸ் L2/1 என்ற முகவரியில் உள்ள ஓர் இந்தியர் வீட்டில் நுழைந்து, கொள்ளையடித்ததுடன் அந்த வீட்டின் குடும்பத் தலைவரான 70 வயது என். ஜெயகோபி என்பவரை வெட்டிக் கொலை செய்ததாக நால்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் சாகும் வரை தூக்குத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் நால்வரும் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

முதியவர் ஒருவர் வீட்டின் வாசலில் கொலை செய்யப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையில் மொத்தம் 7 இந்திய இளைஞர்கள் பிடிபட்டனர். இவர்களில் இன்னும் பிடிபடாமல் இருக்கும் மேலும் ஒரு நபருடன் குற்றஞ்சாட்டப்பட்ட இந்த நால்வரும் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் என்று ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுவா கோக் லியான் நேற்று தெரிவித்து இருந்தார்.

Related News

நபிகள் நாயகத்தின் நண்பர்கள் குறித்து பாசிர் பூத்தே எம்.பி வெளியிட்ட கருத்துக்கு அமைச்சரவை கடும் கண்டனம்

நபிகள் நாயகத்தின் நண்பர்கள் குறித்து பாசிர் பூத்தே எம்.பி வெளியிட்ட கருத்துக்கு அமைச்சரவை கடும் கண்டனம்

பொதுமன்னிப்பு கோரிய விவகாரம்: ஜோ லோ மீதான விசாரணைகள் தொடர்கின்றன - புக்கிட் அமான் அறிவிப்பு

பொதுமன்னிப்பு கோரிய விவகாரம்: ஜோ லோ மீதான விசாரணைகள் தொடர்கின்றன - புக்கிட் அமான் அறிவிப்பு

அரியவகை கனிம ஆய்வு: பினாங்கு அரசு நிதானம்

அரியவகை கனிம ஆய்வு: பினாங்கு அரசு நிதானம்

ஹண்டாவைரஸ் அச்சுறுத்தல்: பினாங்கு துறைமுகத்தில் சுகாதாரக் கண்காணிப்பு தீவிரம்

ஹண்டாவைரஸ் அச்சுறுத்தல்: பினாங்கு துறைமுகத்தில் சுகாதாரக் கண்காணிப்பு தீவிரம்

ஈசா சமாட்டின் மறுஆய்வு மனு ஒத்திவைப்பு: நீதிமன்றப் பதிவுகளைப் பெற கூட்டரசு நீதிமன்றம் அனுமதி

ஈசா சமாட்டின் மறுஆய்வு மனு ஒத்திவைப்பு: நீதிமன்றப் பதிவுகளைப் பெற கூட்டரசு நீதிமன்றம் அனுமதி

கிழக்கு மலேசியப் பயணிகளுக்கு நற்செய்தி: மலேசியா ஏர்லைன்ஸ், ஃபயர்ஃபிளை சிறப்பு மானியக் கட்டணம் அறிவிப்பு

கிழக்கு மலேசியப் பயணிகளுக்கு நற்செய்தி: மலேசியா ஏர்லைன்ஸ், ஃபயர்ஃபிளை சிறப்பு மானியக் கட்டணம் அறிவிப்பு