Jul 18, 2026
Thisaigal NewsYouTube
கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்
தற்போதைய செய்திகள்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

Share:

கிளாந்தான் மாநிலம், மச்சாங் அருகே ஜாலான் கோத்தா பாரு-கோலா கிராய் சாலையின் கிலோமீட்டர் 41 பகுதியில் உள்ள கட்டுமானத் தளத்தில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 5 சீனப் பிரஜைகள் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து இன்று அதிகாலை 12.01 மணியளவில் தகவல் கிடைத்ததாக மச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசுஹார் நோர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், நேற்று இரவு 11.50 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

66 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் ஓட்டிச் சென்ற டொயோட்டா பிரிவஸ் கார், அவருடன் பயணித்த மேலும் நான்கு சீனப் பிரஜைகளுடன் கட்டுமானப் பகுதியிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு மாச்சாங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related News