சிப்பாங், ஜூலை.25-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சட்டவிரோதக் குடியேற்றிகளை வெளியேற்றுவதற்கு குடிநுழைவு முகப்பிடங்களில் செட்டிங் முறையை அமைத்ததாகக் கூறப்படும் அமலாக்க அதிகாரியைத் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.
20 வயது மதிக்கத்தக்க அந்த குடிநுழைவு அதிகாரி இன்று ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு வரும் ஜுலை 29 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது.








