அம்பாங், ஆகஸ்ட்.05-
சிலாங்கூர், தாமான் மெலாவாத்தியில் உள்ள புக்கிட் தாபுர் மலைக்குச் சென்ற மாற்றுத் திறனாளி ஒருவர், வீடு திரும்பாதது குறித்து அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
40 வயது மதிக்கத்தக்க நோர்ஹஃஎப்ஷாம் என்ற அந்த மாற்றுத் திறனாளி, மாய சக்தி நிறைந்த இளவரசி அரண்மனை ஒன்று அந்த மலை மீது இருப்பதாகவும், அதனைப் பார்க்கச் செல்வதாகவும் கூறி புறப்பட்டுச் சென்றவர், நான்கு நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என்று அவரின் 69 வயது தந்தை கண்ணீர் மல்கக் கூறினார்.
நீண்ட காலமாகவே அந்த அரண்மனையைப் பற்றி பேசி வந்த தனது மகன் திடீரென்று கால் நடையாகவே அந்த மலைக்கு நடந்து சென்று விட்டதாக நஸ்ரி ஹருன் என்ற அந்த தந்தை தெரிவித்தார்.
அந்த மாற்றுத் திறனாளியைத் தேடும் பணியில் பொது காலாட் படையினர் ஈடுபட்டுள்ளனர்.








