கோத்தா பாரு, டிசம்பர்.13-
இராணுவ வீரர் ஒருவர் மரணம் அடைந்த இராணுவ லோரியும் காரும் சம்பந்தப்பட்ட விபத்தில் காரிலிருந்து 41 போதைப் பொருள் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மாச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஹுசேன் தெரிவித்தார்.
வீரியத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று நம்பப்படும் அந்த போதைப் பொருள் மாத்திரைகள் புரோட்டோன் வீரா காரில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அந்தக் கார், இராணுவ வண்டியை மோதுவதற்கு முன்னதாக சாலையில் நிலைத்தன்மையை இழந்த நிலையில் கோணல் மாணலாகச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்ததாக அஹ்மாட் ஷாஃபிக்கி கூறினார்.
காரைச் செலுத்திய 34 வயதுடைய நபர், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் அவரிடம் சிறுநீர் பரிசோதனையை நடத்த இயலவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.








