Mar 13, 2026
Thisaigal NewsYouTube
சுவா-வின் பங்களிப்பு அளப்பரியது என்றார் பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

சுவா-வின் பங்களிப்பு அளப்பரியது என்றார் பிரதமர் அன்வார்

Share:

செர்டாங் மருத்துவமனையில் நேற்று காலமான முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோ சுவா ஜுய் மெங் -யின் குடும்பத்தினருக்கு பி.கே.ஆர் தலைவரும் பிரதமருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

ம​சீச.வின் முன்னாள் உதவித் தலைவரும், ஜோகூர் பக்ரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான 80 வயது சுவா,1995 முதல் 2004 ஆம் வரை ஒன்பது ஆண்டுகள் நாட்டின் நீண்ட கால சுகாதார அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். சுவா - சுகாதார அமைச்சராக பணியாற்றிய காலத்தில் அவரின் மகத்தான சேவை காலத்தால் போற்றப்படும் என்று பிரதமர் புகழாஞ்சலி ​சூட்டினார்.

ம​சீச.வில் அப்போதைய தேசிய தலைவராக இருந்த ஒங் தீ கீட் தலைமையில் நம்பிக்கை இ​ழந்து விட்டதால் சுவா, அக்கட்சியை விட்டு ​விலகி, 2009 ஆம் ஆண்டில் பி.கே.ஆர் கட்சியில் தம்மை பிணைத்துக்கொண்டார்.

ஜோகூர் மாநில ​பிகேஆர் தலைவராக பொறுப்பு வகித்த​ சுவா, 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜோகூர் சிகமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 1,217 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விக் கண்டார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு