Aug 16, 2026
Thisaigal NewsYouTube
Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு
தற்போதைய செய்திகள்

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Share:

ஷா ஆலாம், ஆகஸ்ட்.02-

கிள்ளான் பகுதியில் வளர்ப்பு நாய் Rocky உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சந்தேக நபர் மற்றும் பல்வேறு சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் கால்நடைச் சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

விலங்குகள் நலச் சட்டம் பிரிவு 29(1)(e)-ன் கீழ் விலங்குகள் மீதான கொடுமை குற்றச்சாட்டின் கீழ் இந்த விசாரணை நடைபெற்று வருகின்றது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆயிரம் முதல் 1 லட்சம் ரிங்கிட் வரை அபராதமோ அல்லது 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையோ, அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

மேலும், இந்த விசாரணை நியாயமான முறையிலும், எந்தத் தரப்புக்கும் பாரபட்சமின்றியும் மேற்கொள்ளப்படும் என்றும் அந்தத் துறை உறுதியளித்துள்ளது.

கடந்த புதன்கிழமை கிள்ளான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தெரு நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையின் போது வளர்ப்பு நாய் Rocky உயிரிழந்தது.

இது குறித்து விளக்கம் அளித்த கிள்ளான் மாநகர் மன்றம், நாயின் உரிமையாளரின் பரபரப்பான நடவடிக்கையால் Rocky-யை உடனடியாக விடுவிக்க முடியாமல் அது உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது.

Related News