Sep 20, 2026
Thisaigal NewsYouTube
ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து
தற்போதைய செய்திகள்

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

Share:

ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட்.01-

பினாங்கின் ஜாலான் கிரீன் ஹால் பகுதியில் பழுது பார்க்கும் பணி நடந்து கொண்டிருந்த பாரம்பரியக் கட்டடம் ஒன்றின் கூரைப் பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகள் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது விழுந்ததில் வாகனம் சேதமடைந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பினாங்கு மாநகர் மன்றத்தின் அனுமதியுடன் இப்பழுது பார்ப்புப் பணிகள் நடந்து வந்த வேளையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகர் மன்ற அமலாக்கக் குழுவினர் பொதுப் பாதுகாப்பைக் கருதி அப்பகுதியைச் சுற்றி வளைத்து முடக்கியுள்ளனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு திட்டத்தின் கட்டிடக் கலைஞருக்கு மாநகர் மன்றத் தலைவர் டத்தோ ஏ. இராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Related News