Sep 30, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் போலி துப்பாக்கி வைத்திருந்த வங்கதேச ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் போலி துப்பாக்கி வைத்திருந்த வங்கதேச ஆடவர் கைது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.04-

கோலாலம்பூரில் கடந்த திங்கட்கிழமை Razak City Residence என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில் போலி துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த வங்கதேச ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அவரிமிருந்து 9mm HK VP9 pistol இரக போலி துப்பாக்கியும், குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக செராஸ் மாவட்டப் போலீஸ் தலைவர் முஹமட் ரோஸ்டி டாவுட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போலி துப்பாக்கியை அவர் வைத்திருந்ததற்கான காரணம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே வேளையில், வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படுவார் என்றும் முஹமட் ரோஸ்டி குறிப்பிட்டுள்ளார்.

Related News