Jul 10, 2026
Thisaigal NewsYouTube
கடற்படைத் தாக்குதல் ஏவுகணை கொள்முதல்: 4 நாடுகளின் முன்மொழிவுகளைப் பரிசீலிக்கும் மலேசியா
தற்போதைய செய்திகள்

கடற்படைத் தாக்குதல் ஏவுகணை கொள்முதல்: 4 நாடுகளின் முன்மொழிவுகளைப் பரிசீலிக்கும் மலேசியா

Share:

குளுவாங், ஜூன்.28-

மலேசியாவுக்கான NSM ஏற்றுமதி அனுமதியை நோர்வே அரசாங்கம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, அதற்கு மாற்றாக கடற்படைத் தாக்குதல் ஏவுகணைகளை வழங்கக்கூடிய நான்கு நாடுகளின் முன்மொழிவுகளை மலேசியா பரிசீலித்து வருகின்றது.

இது குறித்து தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் வெளியிட்டுள்ள தகவலில், மலேசியக் கடற்படைக் கப்பல்களுக்குப் பொருந்தக்கூடிய ஏவுகணை அமைப்பை தேர்வு செய்வதற்காக தொழில்நுட்பத்துடன் கூடிய செயல்திறன் அடிப்படையில் அமைச்சு ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பரிசீலனையில் உள்ள நாடுகளில் சில ஐரோப்பாவைச் சேர்ந்தவை என்றும், அத்துடன் துருக்கி, தென் கொரியாவும் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், மதிப்பீட்டு நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருவதால் கூடுதல் விவரங்களை வெளியிட காலிட் மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்