Jun 28, 2026
Thisaigal NewsYouTube
என்னது டுரியான் கிலோ 1 ரிங்கிட்டா? 5 நிமிடங்களில் 3 ஆயிரம் கிலோ விற்ற கெடா வியாபாரி
தற்போதைய செய்திகள்

என்னது டுரியான் கிலோ 1 ரிங்கிட்டா? 5 நிமிடங்களில் 3 ஆயிரம் கிலோ விற்ற கெடா வியாபாரி

Share:

கோலா நெருஸ், ஜூன்.28-

கெடா மாநிலம், கம்போங் புக்கிட் துங்கால் பகுதியில் நேற்று, வெறும் 5 நிமிடங்களில் 3,000 கிலோ டுரியான் பழங்களை விற்று வியாபாரி ஒருவர் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

ஒரு கிலோ டுரியான் வெறும் 1 ரிங்கிட் என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டதால், ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.

இது குறித்து 27 வயதான வியாபாரி இஷார் இப்ராஹிம் கூறுகையில், பொருளாதார வசதி குறைந்தவர்களும் துரியான் பழத்தை சுவைக்கும் வாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கில், சில பழங்களை 1 ரிங்கிட் என்ற விலையில் விற்பனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், தினமும் ஒரு டன்னுக்கும் அதிகமான துரியான் பழங்களை விற்பனை செய்து வருவதாகவும், கம்போங் டுரியான், IOI, ஊடாங் மேரா, D24 மற்றும் மூசாங் கிங் உள்ளிட்ட பல்வேறு வகை டுரியான்கள், தரம் மற்றும் அளவுக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News