கோலாலம்பூர், ஆகஸ்ட்.17-
ஸாரா கைரினா மகாதீரின் மரண வழக்கு குறித்த விசாரணை அறிக்கை, சட்டப் பிரிவின் பரிந்துரைக்காக நாளை, ஆகஸ்ட் 18ஆம் தேதி அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்கப்படும். இந்த விசாரணையில் 195 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் தற்கொலை, மிரட்டல், பகடி வதை, போலிச் செய்திகள் பரப்பப்பட்டது ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்து விசாரிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம்.குமார் தெரிவித்துள்ளார். இதில் சம்பந்தப்பட்டக் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட மாட்டார்கள் என உறுதி அளித்த காவல்துறை, பொதுமக்கள் யாரும் வீண் வதந்திகளைப் பரப்பிச் சமூக ஒற்றுமையைக் குலைக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.








