Feb 18, 2026
Thisaigal NewsYouTube
கட்டாய மரண தண்டனை ரத்து: சமூகத்தில் பெருகும் குற்றங்களும் நீதிக்கான கேள்விகளும்
தற்போதைய செய்திகள்

கட்டாய மரண தண்டனை ரத்து: சமூகத்தில் பெருகும் குற்றங்களும் நீதிக்கான கேள்விகளும்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.18-

மலேசியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி முதல் கட்டாய மரண தண்டனை அகற்றப்பட்டது. ஒவ்வொரு நபரின் உயிர் வாழும் உரிமையை மதிப்பதும், தண்டனை முடிந்து கைதிகள் திருந்தி மீண்டும் சமூகத்தில் இணைந்து குடும்பத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதுமே இதன் முக்கிய நோக்கமாகும் என அரசாங்கம் தெரிவித்தது.

தற்போதைய சட்டப்படி, மரண தண்டனை இன்னும் நடைமுறையில் இருந்தாலும் அது கட்டாயமானது அல்ல; அதற்குப் பதிலாக நீதிமன்றங்கள் 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் 12 க்கும் குறையாத பிரம்படிகளைத் தீர்ப்பாக வழங்க முடியும்.

இருப்பினும், சமீப காலமாக நாட்டில் அதிகரித்து வரும் வரும் கொடூரமான கொலைச் சம்பவங்கள் இச்சட்டம் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளன. "கொலை செய்யப்பட்டவரின் உயிர் வாழும் உரிமை என்னவானது? கொடூரமான முறையில் ஒருவரைக் கொன்றவருக்கு எப்படி நீதி வழங்க முடியும்?" போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. மிகக் கொடூரமான குற்றங்களைச் செய்தவர்களைத் திருத்த முடியுமா என்ற ஐயமும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதி மற்றும் சமூகப் பாதுகாப்பு கருதி மரண தண்டனையை மீண்டும் கட்டாயமாக்க வேண்டுமா என்ற விவாதமும் சமூகத்தில் வலுவாக எழுந்துள்ளன.

எனினும் பிலபல கிரிமினல் வழக்கறிஞரும், முன்னாள் சட்ட சீர்திருத்த துணை அமைச்சராக ராம் கர்பாலின் கருத்துப்படி ஒவ்வொரு தண்டனைக்கும் பின்னால் உள்ள அடிப்படை நோக்கம் கைதிகளின் மறுவாழ்வாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தண்டனை முடிந்து கைதிகள் மீண்டும் சமூகத்தில் இணைந்து, தங்கள் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்யும் நபர்களாக மாற வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பது தனது நிலைப்பாடாகும் என்று ராம் கர்ப்பால் வலியுறுத்தியுள்ளார்.

Related News