Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ரிங்கிட் மதிப்பு ஆண்டு இறுதியில் 3.80 ஆக பதிவாகும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரிங்கிட் மதிப்பு ஆண்டு இறுதியில் 3.80 ஆக பதிவாகும்

கோலாலம்பூர், செப்டம்பர் 30-

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டிவிகித குறைப்பு தொடரும் பட்சத்தில் ரிங்கிட் மதிப்பு இந்த ஆண்டு இறுதியில் ஓர் அமெரிக்க டாலருக்கு நிகராக 3 ரிங்கிட் 80 காசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி Muamalat Malaysia Berhad தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முகமது அஃப்ஸானிசான் அப்துக் ரஷித் இதனைக் கூறினார்.

ரிங்கிட் மதிப்பை நிலைநிறுத்தும் நடப்பு நடைமுறைகள் நீடிக்கும் அதேசமயம் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டால் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் மதிப்பு 3.80 ஆக பதிவாகும் சாத்தியம் உள்ளது. இந்த இலக்கை அடையும் சாத்தியம் பிரகாசமாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் மதிப்பு 4 ஆகப் பதிவாக முடியும் என்று SPI Management நிர்வாக இயக்குநர Stephen Innes தெரிவித்துள்ளார்.
ஆனால், ஒரு டாலருக்கு 3 ரிங்கிட் 80 காசை அடைய வேண்டுமானால் இரண்டு முக்கிய ஊக்குவிப்புகள் தேவைப்படுகின்றன. அவற்றில் ஒன்று, அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சி, இன்னொன்று, சீனாவின் சொத்துடைமைச் சந்தையின் உண்மையான எழுச்சி ஆகும். இந்த இரண்டு அம்சங்களும் இல்லையெனில் ரிங்கிட் மதிப்பு நிச்சயமற்றமாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →