நெகிரி செம்பிலானில் கொலை செய்யப்பட்ட 35 வயது சுங்கத்துறை பெண் அதிகாரி நோர்ஹஸ்வானி இப்ராஹிம், கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதால் உயிரிழந்ததாகப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற பரிசோதனையில், அவரது வயிற்றில் இரண்டு இடங்களிலும் வலது கன்னத்தில் ஓரிடத்திலும் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட காயங்களும் கண்டறியப்பட்டதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அவரது 35 வயது கணவர், விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனை அனுபவித்து அண்மையில் விடுதலையானவர் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இரண்டு குழந்தைகளை விட்டுச் சென்றுள்ள நோர்ஹஸ்வானியின் உடல், இறுதிச் சடங்குகளுக்காக கிளந்தானுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.








