Oct 17, 2026
Thisaigal NewsYouTube

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கான 1,000 ரிங்கிட் சிறப்பு நிதியுதவியைப் பெறத் தகுதியுள்ள எஞ்சிய பயனாளர்களுக்கு, அடுத்த கட்டத்தில் மின்னணு நிதிப் பரிமாற்றம் மூலம் நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் சேர்க்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக, புத்ராஜெயாவில் கடந்த 14ஆம் தேதி உதவி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நிலையில், இரண்டாவது நிகழ்ச்சி பினாங்கில் இன்று நடைபெற்றது. இதில் 700 டாக்சி மற்றும் வாடகைக் கார் ஓட்டுநர்கள் அடையாளப் பிரதிநிதிகளாக நேரடியாக உதவியைப் பெற்றனர்.

தீபாவளிக்கு முன்னதாகத் தகுதியுள்ள அனைவருக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என்று கூறிய அமைச்சர், பயனாளர்கள் செல்லுபடியாகும் ஓட்டுநர் அட்டையையும், வாகன அனுமதியையும், பொதுச் சேவை வாகன ஓட்டுநர் உரிமத்தையும் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், உதவி வழங்குவதற்கான தகுதிச் சரிபார்ப்பு வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடைபெற, சம்பந்தப்பட்ட பொது போக்குவரத்து அமைப்புகளின் அறிவிப்புகளை ஓட்டுநர்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் அந்தோணி லோக் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1... | Thisaigal News