Oct 17, 2026
Thisaigal NewsYouTube

கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளம்! பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளம்! பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து, கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷா ஆலாம், யுஎஸ்ஜே 1, யுஎஸ்ஜே 7, சன்வே, அரா டாமான்சாரா, சம்மிட் மற்றும் சுபாங் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளம் தொடர்பான காணொளிகளும் படங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. சில இடங்களில் நீர்மட்டம் உயர்ந்ததுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

யுஎஸ்ஜே 1 பகுதியில் வெள்ளநீர் கடைக்குள் புகும் நிலையை எட்டியதாகவும், சன்வே பகுதியில் வெள்ளத்தின்போது ஒருவர் வடிகாலில் விழுந்ததாகவும் சமூக ஊடகப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →