Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் பல்வேறு சேவைப் பிரிவுகளைச் சேர்ந்த 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வும், உயர் பதவிகளுக்கான தகுதி உயர்வும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13ஆம் தேதி, பொதுச் சேவைப் பதவி உயர்வு வாரியம் இந்த ஒப்புதலை வழங்கியதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதன் மூலம், ஜூசா எனப்படும் உயர் அரசுப் பதவிகள் மற்றும் 10 முதல் 15 வரையிலான சம்பளத் தரங்களில் உள்ள பதவிகளுக்கு அதிகாரிகள் முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதற்கிடையே, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி பணியின்போது ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வான்வழி மருத்துவச் சேவையைச் சேர்ந்த நான்கு சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கும், அவர்களின் சேவையைப் போற்றும் வகையில் மரணத்துக்குப் பிந்தைய பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளம்! பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளம்! பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

தண்ணீர் கலந்ததாகப் புகார்! சிலாங்கூரில் 10 புகார்கள் குறித்து விசாரணை

தண்ணீர் கலந்ததாகப் புகார்! சிலாங்கூரில் 10 புகார்கள் குறித்து விசாரணை