Aug 22, 2026
Thisaigal NewsYouTube
தொழில் உதவிகளுக்கு நாடி (Nadi) மையங்களை அணுகுங்கள் – ஸ்டீவன் சிம்
தற்போதைய செய்திகள்

தொழில் உதவிகளுக்கு நாடி (Nadi) மையங்களை அணுகுங்கள் – ஸ்டீவன் சிம்

Share:

தொழில்முனைவோர் தொழிலை மேம்படுத்த கடன், உரிமம் அல்லது அரசாங்கத் திட்டங்கள் தொடர்பான உதவிகளை நாடும் பொருட்டு அருகிலுள்ள நாடி (Nadi) தகவல் மையங்களை அணுகுமாறு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் ஸ்டீவன் சிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 222 நாடி மையங்களில், சிறு தொழில்கள், வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கான ஒரே இட சேவையாக PRIME அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் தொழில்முனைவோர் கடன், உரிமம், பயிற்சி, டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட அரசாங்க உதவிகள் குறித்து ஒரே கூரையின் கீழ் தகவல்களைப் பெற முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

தொழில்முனைவோரின் தேவையின் அடிப்படையில் சேவை வழங்க நாடி மையங்களில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் பணியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆண்டின் இறுதிக்குள் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தொழில்முனைவோர் வரை PRIME சேவையைப் பயன்படுத்துவார்கள் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

Related News