மலேசியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போதைப்பொருள் தடுப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் போதைப்பொருள் தடுப்புப் படையான ஏ.என்.எஃப் தலைமையகத்திற்குச் சென்றபோது, இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

மெத்தாம்பேட்டமைன் போன்ற செயற்கை போதைப்பொருட்களின் அதிகரிப்பும், எல்லை தாண்டி செயல்படும் குற்றக் குழுக்களின் ஈடுபாடும் அச்சுறுத்தலாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் போதைப்பொருள் கடத்தல் வழித்தடங்களை எதிர்கொள்ளும் பாகிஸ்தானுடன் ஒத்துழைப்பது, மலேசியாவுக்கு முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, இரு நாடுகளும் உளவுத் தகவல் பகிர்வு, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள், பயிற்சி மற்றும் நிபுணத்துவப் பரிமாற்றத்தை தீவிரப்படுத்தவுள்ளன.









