Sep 7, 2026
Thisaigal NewsYouTube
கொதிக்கும் கஞ்சி கொட்டி மாணவிக்கு காயம்: 1.29 லட்சம் ரிங்கிட்  இழப்பீடு
தற்போதைய செய்திகள்

கொதிக்கும் கஞ்சி கொட்டி மாணவிக்கு காயம்: 1.29 லட்சம் ரிங்கிட் இழப்பீடு

Share:

பேராக் தெலுக் இந்தானில் உள்ள பள்ளி நிகழ்ச்சியின்போது கொதிக்கும் புபூர் லம்புக் கஞ்சி கொட்டி காயமடைந்த படிவம் 5 மாணவிக்கு 1 லட்சத்து 29 ஆயிரத்து 40 ரிங்கிட் இழப்பீடு வழங்க தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், செரி இந்தன் தேசிய பள்ளியில் நடைபெற்ற கஞ்சி சமைக்கும் நிகழ்ச்சியில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக, மாணவியின் தாயார் எம். தனலெட்சுமி வழக்கு தொடுத்திருந்தார்.

சமையல் நடைபெறும் பகுதியில் கணித வகுப்பு நடத்த அனுமதித்ததும், சம்பவத்துக்குப் பின்னர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் தாமதம் செய்ததும் பள்ளி மற்றும் ஆசிரியர்களின் அலட்சியம் என நீதிபதி கான் பெங்குன் தீர்ப்பளித்தார்.

தழும்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்காக 1 லட்சம் ரிங்கிட், தீக்காயங்களுக்கு 5,000 ரிங்கிட் தழும்புக்கு 24,000 ரிங்கிட் மற்றும் மருத்துவ அறிக்கைக்காக 40 ரிங்கிட என மொத்தம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 40 ரிங்கிட வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து