Aug 22, 2026
Thisaigal NewsYouTube
கடைக்குள் புகுந்த கார்;  இரும்புத் தூணை மோதியதில்  பெண் பலி
தற்போதைய செய்திகள்

கடைக்குள் புகுந்த கார்; இரும்புத் தூணை மோதியதில் பெண் பலி

Share:

காஜாங், பண்டார் மகோத்தா செராஸில் உள்ள உணவக வளாகத்தில் கார் மோதியதில் இரும்புத் தூண் தலையில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை சுமார் 1.15 மணியளவில், காரை ஓட்டி வந்த 35 வயதுடைய ஆடவர் தவறுதலாக எண்ணெய் மிதியை அழுத்தியதாகக் கூறப்படும் நிலையில், கார் உணவகத்தின் சாப்பாட்டு பகுதியில் நுழைந்தது.

பின்னர் காரை வெளியே எடுக்க முயன்றபோது, 47 வயது பெண் ஒருவர் வாகனத்தைத் தடுக்க ஓடி வந்ததாகவும், கார் திரும்பிச் செல்லும் போது இரும்புத் தூண் ஒன்றில் மோதியதில், துர்திஷ்டவசமாக அது கீழே விழுந்ததில் பெண்ணின் தலையில் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.

காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம், பிரிவு 41(1)-ன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Related News