செத்தியவாங்சா–பந்தாய் நெடுஞ்சாலையான எஸ்.பி.இ-யில், எஸ்.யூ.வி வாகனம் ஒன்று காரின் பின்புறத்தில் மோதி தீப்பற்றி முழுமையாக எரிந்து சேதமடைந்தது.
இன்று நண்பகல் 12.37 மணியளவில் மிட் வேலி நோக்கிச் செல்லும் பாதையில் விபத்து ஏற்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
ரெனால்ட் கேப்சர் எஸ்.யு.வி வாகனம் ஹோண்டா சிட்டியின் பின்புறத்தில் மோதியதைத் தொடர்ந்து தீப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பிற்பகல் 1.21 மணியளவில் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.








