Sep 6, 2026
Thisaigal NewsYouTube
வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய  என்.ஜி.ஓ-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை
தற்போதைய செய்திகள்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய என்.ஜி.ஓ-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

Share:

இந்திய சமுதாயத்திற்கான கொள்கைகளை வகுப்பதில் முக்கிய முன்னெடுப்பாக, கல்வித்துறையில் நீண்டகாலமாக சேவையாற்றி வரும் 19 இந்திய தொண்டு நிறுவனங்களுடன் ‘பெர்சாமா’ கட்சி முக்கிய கலந்துரையாடலை நடத்தியத்தாக அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஸ்பிஸி ரம்லி கூறினார்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அச்சந்திப்பில் மூன்று முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. முதலாவதாக, இந்திய சமுதாயத்திற்காக தனியான ஒரு நிறுவனம் உருவாக்க வேண்டும்.

இரண்டாவதாக, இந்திய சமூகத் திட்டங்களுக்கு நிதியளிக்க அரசாங்கமும் பொதுமக்களும் இணைந்து செயல்படும் நிதி பொறிமுறை உருவாக்க வேண்டும்.மூன்றாவதாக, அமைச்சரவை அளவில் ஒரு குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்தப் பரிந்துரைகள் ‘பெர்சாமா’வின் அடுத்த மாதம் வெளியாகும் கொள்கை ஆவணங்களில் இணைக்கப்படும் என ரஸ்பிஸி ரம்லி தெரிவித்தார்.

மேலும், வெறும் வாக்குறுதிகளை வழங்காமல், ஒவ்வொரு திட்டத்திற்கான செலவுகளையும் முழுமையாகக் கணக்கிட்டு, யதார்த்தமான செயல்திட்டங்களாகவே வெளியிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து