பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில், சுமார் 5,000 ரிங்கிட் மதிப்புள்ள விலங்கு கொம்புகள் என சந்தேகிக்கப்படும் 45 வனவிலங்கு பொருட்களை கடத்த முயன்ற சம்பவத்தை எல்லை பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு முகமை, எ.கே.பி.எஸ் முறியடித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையில், குவாங்சோ, சீனாவில் இருந்து வந்த 57 வயது இந்தோனேசிய ஆண் பயணியின் பயணப் பெட்டியிலிருந்து இப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
விமானம் மூலம் வந்த அந்தப் பயணி, உரிய அனுமதி அல்லது சட்டப்பூர்வ ஆவணங்கள் இன்றி வனவிலங்கு பொருட்களை எடுத்துச் சென்றதாக எ.கே.பி.எஸ் தெரிவித்துள்ளது.
அனைத்து 45 பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.








