Aug 22, 2026
Thisaigal NewsYouTube
லம்பீர் தேசியப் பூங்காவில் காணாமல் போன பெண் பாதுகாப்பாக மீட்பு
தற்போதைய செய்திகள்

லம்பீர் தேசியப் பூங்காவில் காணாமல் போன பெண் பாதுகாப்பாக மீட்பு

Share:

சரவாக், மீரி லம்பீர் தேசியப் பூங்காவில் மலையேற்றத்தின் போது காணாமல் போன 31 வயது பெண், பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

வெரோனிக் அனாக் ஜோசப் என்ற அந்தப் பெண், நேற்று ஐந்து நண்பர்களுடன் மலையேற்றம் மேற்கொண்ட போது அவர்களை முன்னேறி சென்ற நிலையில், திடீரென காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருள் காரணமாக நேற்றிரவு தேடுதல் நடவடிக்கை தொடங்க முடியாத நிலையில், இன்று காலை தேடுதல் மீண்டும் தொடர்ந்த நிலையில், காலை 11.17 மணியளவில் வெரோனிக் கண்டுபிடிக்கப்பட்டார்.

வழுக்கி விழுந்ததால் லேசான காயம் ஏற்பட்தால் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டார்.

Related News