Sep 7, 2026
Thisaigal NewsYouTube
பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்ட மலேசியர் விடுவிப்பு
தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்ட மலேசியர் விடுவிப்பு

Share:

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மோசடி அழைப்பு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது தடுத்து வைக்கப்பட்ட 32 வயது மலேசியர், விடுவிக்கப்பட்டு பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளார்.

அந்த நபருக்கும் பிடிப்பட்ட மோசடி கும்பலுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் ருஸ்டி இசா தெரிவித்தார்.

அவரிடம் மலேசிய வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை, CCID சார்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, இணையவழி மோசடி கும்பலில் மலேசியர்கள் ஈடுபட்டிருப்பதாக வெளியான தகவல்களை விசாரிக்க சிறப்புக் குழு ஒன்று பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் காலித் இஸ்மாயில் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இஸ்லாமாபாத் மோசடி அழைப்பு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 258 வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களில் வேறு எந்த மலேசியரும் இடம் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து