Aug 22, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் புகைமூட்டம் மோசமாகி வருகிறது
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் புகைமூட்டம் மோசமாகி வருகிறது

Share:

ஆசியான் வட்டாரத்தில் புகைமூட்டம் பரவுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மலேசியா வலியுறுத்தியுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் ஆசியான் பிராந்தியத்தை புகைமூட்டமற்ற பகுதியாக மாற்ற வேண்டும் என்ற மலேசியாவின் நிலைப்பாடு தொடர்ந்து உறுதியாக இருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் ஜோசஃப் குருப் தெரிவித்தார்.

இது தொடர்பாக, மலேசியாவின் நிலைப்பாட்டை விளக்கி ஆசியான் தலைமைச் செயலாளர் டாக்டர் காவ் கிம் ஹோர்னுக்கு அதிகாரபூர்வ செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, இன்று காலை சரவாக் மற்றும் மலாக்கா மாநிலங்களில் காற்றுத் தரம் மோசமடைந்துள்ளது.

மலேசியா முழுவதும் 11 பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News