சீரமைப்பு பணிக்காக பொருத்தப்பட்டிருந்த 6 மீட்டர் தடுப்பு சுவர் ஒன்று காவலாளர் மீது சரிந்து விழுந்ததால், அந்த 73 வயது முதியவர் சம்பவம் நடந்த இடத்திலையே பலியானார். கோலாலம்பூர் ஜாலான் சேட் புத்ராவில் அமைந்துள்ள, விஸ்மா வையிஆர், இல் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு பணிகள் தொடர்பாக , நேற்று இரவு மணி 8.30 மணியளவில் பொருட்கள் கணக்கெடுப்பிற்காக பாதுகாப்பு தடுப்பின் அருகில் சென்ற 73 வயது பாதுகாவலர் பரிதாபமாக சம்பவம் இடத்திலேயே மாண்டார்.
இந்தத் துயர சம்பவம் இன்று நள்ளிரவு 12.53 மணியளவில் தீயணைப்பு நிலையத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டு 41 தீயணைப்பு வீரர்களுடன் கோலாலம்பூர் ஹங் துவா தீயணைப்பு நிலையத்தினர் சென்றபோது அந்த முதியவர் 3 மீட்டர் ஆழத்தில் புதைந்து இறந்து கிடந்தார் என கோலாலம்பூர் தீயணைப்பு பிரிவின் முதன்மை அதிகாரி முகமட் ரிட்சுவான் ரசாலி தெரிவித்தார்.








