பெட்டாலிங் ஜெயா, நவம்பர்.05-
பெட்டாலிங் ஜெயா பகுதியில், சட்டவிரோதமாகக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க, பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம், நகர் முழுவதும் 43 இடங்களில் அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அவற்றில் 16 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, கண்காணிப்பைப் பலப்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 3-ஆம் தேதி, ஜாலான் SS 3/29 பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராவைப் பார்வையிட்ட பெட்டாலிங் ஜெயா மேயர் முகமட் ஸாரி சாமிங்கோன், சட்டவிரோதமாகக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் பிடிபட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதே வேளையில், நகரின் தூய்மையைப் பாதுகாக்க, குடியிருப்பாளர்களும் தாமாக முன்வந்து இது குறித்துப் புகார்கள் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








