Aug 13, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் மதிப்பு சரிவு: இருப்பினும் ஜிடிபி வளர்ச்சி சிறப்பாக உள்ளது
தற்போதைய செய்திகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் மதிப்பு சரிவு: இருப்பினும் ஜிடிபி வளர்ச்சி சிறப்பாக உள்ளது

Share:

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால், வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் அமெரிக்க டாலருக்கு நிகராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சரிவடைந்துள்ளது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 4.0930 என்ற அளவில் விற்பனையை நிறைவு செய்தது. இது நேற்று முடிவடைந்த வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் குறைவான அளவாகும்.

இருப்பினும், 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5.3% என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5.8விலுக்காடு ஆக உயர்ந்து சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது மலேசியப் பொருளாதாரம் வலுவாக இருப்பதைக் காட்டுவதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு முழுவதும் மலேசியா சுமார் 5விலுக்காடு பொருளாதார வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில், அனைத்துலக மற்றும் பிராந்திய நாடுகளின் பணிகளுக்கு நிகராகவும் ரிங்கிட் சரிவையே பதிவு செய்துள்ளது.

Related News

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது