கோலாலம்பூர், நவம்பர்.13-
ஓர் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. கிட்டத்தட்ட 13 மாதங்களுக்குப் பிறகு இன்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த எட்டு நாட்களாக தொடர்ச்சியாக வலுவடைந்து வந்த ரிங்கிட், இன்று மாலை 6 மணியளவில் ஓர் அமெரிக்க டாலர் மதிப்பில் 4 ரிங்கிட் 12 காசாகப் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இப்போதுதான் முதல் முறையாக ரிங்கிட்டின் மதிப்பு 8.34 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று பேங்க் முவாமாலாட் மலேசியா பெர்ஹாட்டின் பொருளாதார நிபுணர் டாக்டர் முகமட் அஃப்ஸாம்ஸாம் அப்துல் ரஷிட் தெரிவித்தார்.








