Nov 18, 2025
Thisaigal NewsYouTube
டச்சு  மாடல் அழகியின் தாயாருக்கு 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கும் உத்தரவை  ஒத்தி வைக்க நீதிமன்றம் அனுமதி
தற்போதைய செய்திகள்

டச்சு மாடல் அழகியின் தாயாருக்கு 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கும் உத்தரவை ஒத்தி வைக்க நீதிமன்றம் அனுமதி

Share:

புத்ராஜெயா, நவம்பர்.18-

கோலாலம்பூரில் உயிரிழந்த டச்சு மாடல் அழகி இவானா எஸ்தர் ராபர்ட் ஸ்மித்தின் தாயாருக்கு 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை 48 மணி நேரத்தில் வழங்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைப்பதற்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்தது, அரசாங்கம் செய்து கொண்டுள்ள மேல்முறையீட்டின் முடிவு தெரியும் வரை, அந்த இழப்பீடு வழங்கப்படுவதை தற்காலியமாக நிறுத்தி வைக்குமாறு மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற டத்தோ முகமட் ஸைனி மஸ்லான் தெரிவித்தார்.

இந்த இழப்பீடு வழங்கப்படுவதை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் விண்ணப்பத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் அரசாங்கத் தரப்பில் பிறகு மாற்றியமைக்க முடியாத ஒரு தாக்கத்தை இவ்வழக்கு ஏற்படுத்தி விடும் என்று அவர் குறிப்பிட்டார்.

2017 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் ஓர் அமெரிக்கத் தம்பதியரின் ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் 20 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணம் அடைந்த 18 வயதுடைய டச்சு மாடல் அழகியின் இறப்பு குறித்து போலீஸ் தரப்பில் சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என்று கோரி அந்த மாடல் அழகியின் தாயார், அரசாங்கத்திற்கு எதிராக தொடுத்த வழக்கில் 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் வெற்றி பெற்றுள்ளார்.

கொலைக்கான சாத்தியக் கூறுகளைக் குறிக்கும் சூழ்நிலை ஆதாரங்கள் இருந்த போதிலும், புலனாய்வு அதிகாரி "தன்னிச்சையாக ஸ்மித்தின் மரணத்தை தற்கொலை என்று வகைப்படுத்தினார் என்று உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

Related News