சிலாங்கூர் மாநில அரசின் ஒத்துழைப்புடன் மனித வள அமைச்சு மற்றும் சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ ஏற்பாட்டில், கிள்ளானில் இன்று தொடங்கியிருக்கு வேலை வாய்ப்புச் சந்தை, வருகையாளர்களுக்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்க வல்லதாகும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதி ராவ் தெரிவித்தார்.
கிள்ளான் டேவான் ஹம்ஸா மண்டபத்தில் இன்று சனிக்கிழமை தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில், ஆஸ்த்ரோ, வேஸ்த்போர்ட், மேய்பேங்க் போன்ற 38 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதாக கணபதி ராவ் குறிப்பிட்டார்.
தங்கள் நிறுவனத்தில் எத்தகைய வேலை வாய்ப்புகள் உள்ளன, எத்தகைய மனுதாரர்கள் தேவைப்படுகின்றன என்பதற்கு முகப்பிடங்களை அமைத்து வேலை வாய்ப்புகளை வழங்க அவை முன்வந்திருப்பதாக கணபதி ராவ் விவரித்தார்.
தாயாரிப்புத் துறை, சேவைத் துறை, வங்கித் துறை , உணவுத் துறை மற்றும் உபசரனைத் துறை ஆகியவற்றில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பற்றிக்கொள்வதற்கு இளையோர்கள் இந்த வேலை வாய்ப்புச் சந்தையை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கணபதி ராவ் கேட்டுக்கொண்டார். இந்த வேலை வாய்ப்புச் சந்தையை மனித வள அமைச்சர் வி.சிவக்குமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

Related News

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்


