டாமன்சாரா நாடாளுமன்ற அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் மற்றும் மூன்று உள்ளூர் பல்கலைக்கழகங்கள் இணைந்து இன்று காலையில் கம்போங் செம்பாகாவில் நதியை தூய்மைப்படுத்தும் கூட்டுப்பணி திட்டத்தை நடத்தின.
இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட்ட டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினரும் இலக்கவியல் அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ, சுற்றுச்சூழல் தூய்மையைப் பேணுவதில் பொதுமக்களின் பொறுப்புணர்வை வளர்ப்பதே மாணவர்களும் சமூகத்தினரும் பங்கேற்ற இத்திட்டத்தின் நோக்கம் என்றார்.
இன்று காலை நடந்த குப்பை சேகரிக்கும் போட்டியில் நான்கு குழுக்கள் பங்கேற்றன. சுற்றுச்சூழல் மற்றும் நதிக்கரைகள் எப்போதும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய, இதுபோன்ற கூட்டுமுயற்சிகள் எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்று கோபிந்த் சிங் விருப்பம் தெரிவித்தார்.











