உலகச் சந்தையில் செம்பனை எண்ணெயின் விலை உயர்ந்து வரும் நிலையில், பாட்டிலில் விற்கப்படும் தூய செம்பனை சமையல் எண்ணெயின் விலையை நிலைநிறுத்துவதற்காக அரசாங்கம் மாதந்தோறும் 15 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கவுள்ளது.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சரான அர்மிஸான் முகமட் அலி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒரு கிலோ எண்ணெய் 6 ரிங்கிட் 90 சென்னுக்கும், 2 கிலோ 13 ரிங்கிட் 30 சென்னுக்கும், 3 கிலோ 19 ரிங்கிட் 60 சென்னுக்கும், 5 கிலோ 30 ரிங்கிட் 90 சென்னுக்கும் விற்பனை செய்யப்படும்.
கடந்த நவம்பர் 6ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் விலைக் கட்டுப்பாட்டு முறைமையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்தத் தலையீடு இல்லையெனில், 5 கிலோ எண்ணெயின் விலை 34 ரிங்கிட்டாக உயர்ந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், உணவகத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க, 15 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான விண்ணப்பங்களும் விரைவுபடுத்தப்பட்டு வருவதாக அர்மிஸான் தெரிவித்தார்.








