Nov 11, 2026
Thisaigal NewsYouTube

சாமிவேல் ஜைராஸ் மறைவுக்கு பக்காத்தான் ஹராப்பான் ஆழ்ந்த இரங்கல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சாமிவேல் ஜைராஸ் மறைவுக்கு பக்காத்தான் ஹராப்பான் ஆழ்ந்த இரங்கல்

மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது உயிரிழந்த பிகேஆர் அலோர் காஜா தொகுதி துணைத் தலைவர் சாமிவேல் ஜைராஸின் மறைவுக்கு, பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் நடவடிக்கைப் பிரிவு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.

அசாகான் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டெனேஷ் பாலசுப்ரமணியத்தின் தேர்தல் பிரதிநிதியாகப் பணியாற்றிய சாமிவேல் ஜைராஸின் மறைவு, கட்சிக்கும் தேர்தல் பிரசாரக் குழுவினருக்கும் பேரிழப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சிக்காகவும், குறிப்பாக நடப்பு மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரத்திலும் அவர் ஆற்றிய சேவைகளும் பங்களிப்புகளும் என்றும் நினைவுகூரப்படும் எனத் தேர்தல் நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டதுடன், இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை அமைதியாக மேற்கொள்ள குடும்பத்தினருக்கு உரிய அவகாசம் வழங்குமாறும் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், கட்சியின் உயர்மட்டத் தலைமைப் பிரதிநிதியான டாக்டர் குணராஜா ஜோர்ஜ் கூறுகையில், சாமிவேல் ஜைராஸின் குடும்பத்தினருக்கும் தேர்தல் குழுவினருக்கும் உதவியாக தற்போது அசாகானில் இருப்பதாக குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →