Nov 11, 2026
Thisaigal NewsYouTube

கைதிகளுக்குப் பாதி தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க புதிய சட்டம் – முஹமட் சாபு வலியுறுத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கைதிகளுக்குப் பாதி தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க புதிய சட்டம் – முஹமட் சாபு வலியுறுத்து

கைதிகள் தங்களின் சிறைத் தண்டனைக் காலத்தில் பாதியை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முஹமட் சாபு தெரிவித்துள்ளார்.

இதற்காகச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக, தற்போதைய நாடாளுமன்றத் தவணை முடியும் வரை, தமது அமைச்சர் சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினரும் அமானா கட்சித் தலைவருமான முஹமட் சாபு, தமது இந்த நிலைப்பாடு முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக் மீதான தனிப்பட்ட விரோதத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதேவேளையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், பதவி, அரசியல் செல்வாக்கு அல்லது குடும்பப் பின்னணியின் அடிப்படையில் நீதியில் வேறுபாடு இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மலேசியாவில் இருவேறு நீதி முறைகள் நடைமுறையில் இருக்கக்கூடாது என்றும் முஹமட் சாபு குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →