Nov 11, 2026
Thisaigal NewsYouTube

பேராவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேராவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் காயம்

பேராக் மாநிலம் கம்போங் காஜா, கம்போங் பெண்டாங் பெசார் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து நேற்றிரவு இரவு சுமார் 8.25 மணியளவில் நிகழ்ந்ததாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

விபத்தில் 50 வயதுகளில் உள்ள ஓர் ஆண், 30 முதல் 50 வயதுக்குட்பட்ட இரு பெண்கள் மற்றும் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட மூன்று சிறார்கள் காயமடைந்தனர்.

எரிவாயு உருளைகளை ஏற்றிச் சென்ற டிரெய்லர் லாரி, சரக்குக் லாரி மற்றும் பல்நோக்கு வாகனம் ஆகிய மூன்று வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கியதாக சபாரோட்ஸி நோர் அஹ்மாட் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், வாகனங்களுக்குள் சிக்கியிருந்த காயமடைந்தவர்களை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் ஆறு பேரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →