எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக், தனது எஞ்சிய சிறைத் தண்டனையை 2028 ஆகஸ்ட் 23 வரை வீட்டுக் காவலில் கழிக்க உத்தரவு வழங்கியுள்ள கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த உள்துறை அமைச்சு தயாராக உள்ளது.
கூட்டரசு அரசியலமைப்பின் 42ஆவது பிரிவின்படி, மாட்சிமை தங்கிய மாமன்னர் ஒப்புதல் அளித்த அரச மன்னிப்பு முடிவை உள்துறை அமைச்சு மதித்து நிலைநிறுத்துவதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்தார்.
அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் உரிய நடைமுறையைப் பின்பற்றி, தெளிவான சட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதோடு தண்டனைகளை நிறைவேற்றுவது மற்றும் காவலில் வைப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்கச் செயல்படுவதை உறுதி செய்வது உள்துறை அமைச்சு மற்றும் சிறைச்சாலைத் துறையின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.








