Nov 10, 2026
Thisaigal NewsYouTube

கிளந்தானில் 90 கிலோ கஞ்சா பறிமுதல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிளந்தானில் 90 கிலோ கஞ்சா பறிமுதல்

கிளந்தான் மாநிலத்தின் தானா மேரா நகரிலுள்ள தொலைத் தொடர்புக் கடையில் போலீசார் நடத்திய சோதனையில், 90 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 27 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தானா மேரா மாவட்டக் காவல் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தானா மேரா காவல் நிலையத்தினருடன் இணைந்து அந்தச் சந்தேக நபரைக் கைது செய்ததுடன் 90 கிலோ கஞ்சா பொருளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.   

சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையிலும், அவரது கைப்பேசியில் இருந்த தகவல்களை ஆய்வு செய்ததிலும், அவர் அண்மையில் தானா மேரா நகரிலுள்ள தொலைத்தொடர்புக் கடை ஒன்றில் ஒரு பொட்டலத்தை ஒப்படைத்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது என்று கிளந்தான் மாநிலக் காவல் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் போலீசார் இதைத் தெரிவித்தனர்.

போதைப்பொருட்களைப் நெகிழி பைகளில் சுற்றிப் பெட்டிகளில் அடைத்து, கூரியர் சேவை மூலம் கிளந்தானிலும் பிற பகுதிகளிலும், அந்தக் கும்பல் விநியோகித்து வந்ததாகப் போலீசார் தெரிவித்தனர். சுங்கை கோலோக் ஆற்றைக் கடந்து, சட்டவிரோதப் படகுத்துறை வழியாக அண்டை நாட்டிலிருந்து போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் மேலும் கூறினர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →