தாவாவ், ஜாலான் சின் ஓன் சாலையின் தாமான் கிரின் அருகே உள்ள ஆற்றங்கரையில் மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார். அவர் காணாமல் போனதாக தந்தை புகார் அளித்த சுமார் இரண்டு மணி நேரத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
அந்தப் பெண் காணாமல் போனதாக நண்பகல் 12 மணியளவில் அவரது தந்தை புகார் அளித்த நிலையில் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்ட கிராம மக்கள், பிற்பகல் 2 மணியளவில் ஆற்றங்கரையில் அவரின் உடலைக் கண்டுள்ளனர்.
பிற்பகல் 2.03 மணிக்குச் சம்பவ இடத்தை அடைந்த மீட்புக் குழுவினர், அந்தப் பெண்ணின் உடல் ஆற்றின் ஓரத்தில் சிக்கியிருந்ததைக் கண்டதாக தாவாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஜெமிஷின் உஜின் தெரிவித்தார்.








