Nov 10, 2026
Thisaigal NewsYouTube

நஜிப் பாதுகாப்பாக வீடு திரும்பினார்- ரோஸ்மா உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப் பாதுகாப்பாக வீடு திரும்பினார்- ரோஸ்மா உறுதி

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக், தாமான் டூத்தா, ஜாலான் லங்காக் டூத்தாவில் உள்ள தமது இல்லத்துக்குப் பாதுகாப்பாக வந்தடைந்ததை அவரது மனைவி டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் இன்று உறுதிப்படுத்தினார்.

நஜிப் வீடு திரும்பியது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரோஸ்மா, 'அல்ஹாம்டுலில்லா’ என்று சுருக்கமாகக் கூறி நன்றி தெரிவித்தார். நஜிப் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிப்பதற்கான நீதிமன்றத்தின் உத்தரவு மன நிறைவை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்ட நஜிப்பின் சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை, 2028 ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் கழிக்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று புதிய உத்தரவைப் பிறப்பித்து, அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நஜிப்பை ஏற்றி வந்த வாகனம் இல்லத்தை வந்தடைந்தபோது, வீட்டுக்கு வெளியே அமைதியான சூழல் நிலவியதுடன் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் சீராக மேற்கொள்ளப்பட்டிருந்தன என ரோஸ்மா தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →