Nov 10, 2026
Thisaigal NewsYouTube

மாணவியைப் பாலியல் துன்புறுத்திய முன்னாள் ஆசிரியருக்கு 12 ஆண்டு சிறை – அப்பீல் நீதிமன்றம் உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாணவியைப் பாலியல் துன்புறுத்திய முன்னாள் ஆசிரியருக்கு 12 ஆண்டு சிறை – அப்பீல் நீதிமன்றம் உறுதி

கடந்த 2022-ஆம் ஆண்டு தனது முன்னாள் மாணவியைப் பாலியல் துன்புறுத்திய வழக்கில், முன்னாள் உடற்கல்வி ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையையும் 5 பிரம்படிகளையும் புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

49 வயதான ஹமிஸான் நவாய் என்ற அந்நபர் தாக்கல் செய்த அப்பீல் மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, தள்ளுபடி செய்தது.

மேலும், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பில் தலையிடுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், இன்று முதல் தண்டனையை அனுபவிக்க அவரைச் சிறையில் அடைக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் பேரா, பத்தாங் பாடாங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், அப்போது 15 வயதாக இருந்த தனது மாணவியை மூன்று முறை பாலியல் துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு மே 9-ஆம் தேதி தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றம் அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →