Nov 10, 2026
Thisaigal NewsYouTube

நஜிப்புக்கு வீட்டுக் காவல் அனுமதி - போக்குவரத்து அமைச்சர் பதவிலிருந்து விலகினார் அந்தோணி லோக்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப்புக்கு வீட்டுக் காவல் அனுமதி - போக்குவரத்து அமைச்சர் பதவிலிருந்து விலகினார் அந்தோணி லோக்

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஊழல் வழக்கில் எஞ்சிய சிறைத் தண்டனையை இன்று முதல் வீட்டுக் காவலில் அனுபவிக்க கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, ஜசெக பொதுச் செயலாளரும், போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக், அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக விலகியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் போக்குவரத்து அமைச்சராக தாம் பொறுப்பேற்று நடத்த வாய்ப்பளித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் ஒத்துழைப்புக்கும் நன்றி கூறியுள்ள அவர், அடுத்த அமைச்சரிடம் பொறுப்புகளைச் சுமுகமாக ஒப்படைக்க முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதமே பதவி விலகுவதாக அறிவித்த அந்தோணி லோக், நஜிப் வீட்டுக் காவலில் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தொடங்கியதும் தனது விலகல் அமலுக்கு வரும் எனக் கூறியிருந்தார்.

அதன் படி, இன்று அவர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நஜிப்புக்கு வீட்டுக் காவல் அனுமதி - போக்குவரத்து அமைச்சர்... | Thisaigal News