Nov 11, 2026
Thisaigal NewsYouTube

கார்டினியா ரொட்டி சாப்பிட்ட சிறார்களுக்கு உடல்நலக் குறைவா? - சுகாதார அமைச்சு ஆய்வு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கார்டினியா ரொட்டி சாப்பிட்ட சிறார்களுக்கு உடல்நலக் குறைவா? - சுகாதார அமைச்சு ஆய்வு

கார்டினியா (Gardenia) ரொட்டி மற்றும் கேக் வகைகளைச் சாப்பிட்ட சிறார்கள், உடல்நலக் குறைவுக்கு ஆளானதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தங்களது உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை என கார்டினியா பேக்கரிஸ் (கேஎல்) செண்டிரியான் பெர்ஹாட் உறுதியளித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், புகாருக்குள்ளான உணவுப் பொருட்கள் உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளைப் பூர்த்தி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் புகார்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நேற்று சுகாதார அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களது தொழிற்சாலையை நேரில் ஆய்வு செய்ததாகவும், அங்குள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் திருப்தி தெரிவித்ததாகவும் கார்டினியா விளக்கம் அளித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →