Nov 11, 2026
Thisaigal NewsYouTube

அலோர் ஸ்டாரில் மனிதக் கடத்தல்: 16 இந்தோனேசியப் பெண்கள் மீட்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அலோர் ஸ்டாரில் மனிதக் கடத்தல்: 16 இந்தோனேசியப் பெண்கள் மீட்பு

கெடா மாநிலம், அலோர் ஸ்டாரில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட ‘ஓப் பிந்து’ நடவடிக்கையில், மனிதக் கடத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் 16 இந்தோனேசியப் பெண்கள் மீட்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக இரு மலேசிய ஆடவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நவம்பர் 10-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில், ஜாலான் கங்சா, தாமான் டேசா பைடுரி பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் இந்த அதிரடி நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனையில் இரண்டு வாகனங்கள், 33 இந்தோனேசியக் கடப்பிதழ்கள் மற்றும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 598 ரிங்கிட் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இந்தச் சம்பவம் மனிதக் கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மீட்கப்பட்ட பெண்களும், கைது செய்யப்பட்ட இரு ஆண்களும் மேலதிக விசாரணைக்காக கெடா மாநில குடிநுழைவுத் துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →