Nov 11, 2026
Thisaigal NewsYouTube

அசாகான் வேட்பாளரின் உதவியாளர் விபத்தில் மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அசாகான் வேட்பாளரின் உதவியாளர் விபத்தில் மரணம்

மலாக்கா தேர்தலில் அசகான் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்யிடும் பி. டேனஸின் உதவியாளர் சாமிவேல், இன்று மதியம் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட அவரின் வாகனம் மலாக்கா, ஞாலாசில் தேர்தல் நடவடிக்கை அறை அருகில் மதியம் 12. 30 மணியளவில் விபத்துக்குள்ளானது.

தகவல் கிடைத்து 5 நிமிடத்தில் சம்பவ இடத்தை வந்தடைந்த தீயணைப்புப் படையினர், காரில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய நிலையில் காணப்பட்ட சாமிவேல் உடலை, சிறப்பு கருவிகளைக் கொண்டு மீட்டனர்.

சுகாதார அதிகாரிகள், பரிசோதனை செய்ததில் கடுமையான காயங்களுக்கு ஆளான அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினர்.

மலாக்கா தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்த நிலையில் அசாகான் தொகுதியில் போட்டியிடும் டேனஸின் வெற்றிக்காக அவரின் உதவியாளர் கடந்த ஒரு வார காலமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →