Nov 11, 2026
Thisaigal NewsYouTube

நஜிப்பின் நிபந்தனை மன்னிப்புக்கு எதிரான போராட்டங்களைத் தவிர்க்க வேண்டும் – அஹ்மாட் ஸாஹிட்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப்பின் நிபந்தனை மன்னிப்புக்கு எதிரான போராட்டங்களைத் தவிர்க்க வேண்டும் – அஹ்மாட் ஸாஹிட்

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை அடிப்படையிலான அரச மன்னிப்புக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்துவது, மாட்சிமை தங்கிய மாமன்னரின் அரசியலமைப்பு அதிகாரத்திற்கு சவால் விடுப்பதாக அமையக்கூடும் என அம்னோ எச்சரித்துள்ளது.

அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டரசு அரசியலமைப்பின் 42ஆவது பிரிவின் கீழ் மாமன்னர் வழங்கியுள்ள இந்த மன்னிப்பு, அவரது அரசியலமைப்பு அதிகாரம் மற்றும் தனிச்சிறப்புரிமைக்கு உட்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மாமன்னரின் அதிகாரத்தையும் மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் அம்னோ உறுதியாக இருக்கும் என்றார்.

மேலும், மலேசியா சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்ட நாடு என்றும், அரசியலமைப்புக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும் அனைத்து சட்ட நடைமுறைகளையும் பொதுமக்கள் மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நஜிப் ரஸாக்கிற்கு வீட்டுக் காவலில் எஞ்சிய தண்டனையை அனுபவிக்க அனுமதிக்கும் அரசாணை தொடர்பாக மாமன்னருக்கு அம்னோ தனது நன்றியையும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →